பல்லடத்தில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து

பல்லடம் : பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பாப்பம்மாள் நேற்று மரணம் அடைந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது, பட்டாசு வெடித்த போது அதில் இருந்து வந்த தீப்பொறிகள் பி.கே.பங்காருசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான இடத்தில் காய்ந்த நிலையில் கிடந்த முட்புதர் செடிகளில் தீப்பற்றி அப்பகுதி முழுவதும் தீ பரவியது.

அருகில் வீடுகள் இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள், கூடுதல் தண்ணீர் லாரிகளை வரவழைத்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.மேலும், பல்லடம் அருகே டிஎம்எஸ் நகரில சிலர் காட்டு பகுதியில் இருந்த செடிகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் தீ பரவி ஏராளமான செடிகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related posts

ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி பதிலளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்

ஜூன் 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை