ஆர்.கே.பேட்டை அருகே சமத்துவபுரத்தில் 6 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆர்.காந்தி சொந்த பணத்தில் வழங்கினார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே சமத்துவபுரத்தில் குடியிருக்கும் 6 ஏழை குடும்பங்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தனது சொந்த பணம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை எஸ்.வி.ஜி.புரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகினறனர். சமீபத்தில் இங்கு தமிழ்நாடு அரசு நிதியுடன் வீடுகள் புதுப்பிக்கப்பட்டு, சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சமத்துவபுரத்தில் வசித்து வரும் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள பொருளாதார வசதியின்றி அவதிப்பட்டு வருவதாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை சந்தித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஏழை குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று உடனடியாக 6 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் நேற்று மாலை சமத்துவபுரத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.காந்தி தலா ரூ.50,000 வீதம், 6 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் சொந்த பணத்தை வழங்கினார்.

தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக உதவி செய்த அமைச்சருக்கு அக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் அமைச்சருடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனி, திமுக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்