செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருவாரூரில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டத்தில் சிறை வைத்தனர். அப்போது அந்த மண்டபம் முன் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 விவசாயிகள் செல்போன் டவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சந்தேகங்கள் தீருமா?