வைரலோ வைரல்

குடும்பமே பிரதானம்!

கிரிக்கெட் என்றாலே தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளையும், தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் கென்யாவில் உள்ள மசாய் மாரா சரணாலயத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். மசாய் மாரா சரணாலயம் சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகளுக்கு பிரபலமானது. சச்சின் தனது சுற்றுலா படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அங்கு சச்சின் தனது மகள் மற்றும் மனைவியுடன் ஜங்கிள் சஃபாரி சென்று கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களைத்தான் ரசிகர்களும், கிரிக்கெட் விரும்பிகளும் எங்கும் பகிர்ந்து வருகிறார்கள்.

உதவிய திருடர்கள்!

டெல்லியில் உள்ள ஷாதாரா பகுதியில் பர்ஷ் பஜார் என்ற வீதி உள்ளது. இந்த வீதியில் கடந்த ஜூன் 21ஆம் தேதி இரவு ஒரு தம்பதி தனியே நடந்து சென்றுள்ளனர். அப்போது ஸ்கூட்டி வண்டியில் வந்த இருவர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.மதுபோதையில் இருந்த இருவரும் தம்பதியிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வழிப்பறி செய்தனர். கையில் இருக்கும் பணத்தைத் தருமாறு அவர்கள் கேட்டு மிரட்டிய நிலையில், அந்த நபரிடம் வெறும் 20 ரூபாய்தான் பணம் இருந்துள்ளது. தம்பதியின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு மனம் இரங்கிய திருடர்கள் தங்களிடம் இருந்த 100 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து தங்கள் பைக்கை எடுத்துச் சென்றனர். இவர்களின் இந்த செயல் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் திருடர்களின் இந்த வினோத செயலை பார்த்து சிரித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட ‘சூது கவ்வும்’ விஜய் சேதுபதி குழுவினரை இந்தச் செயல் நினைவூட்டுவதாக இருக்கிறது. 

Related posts

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை