மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்படுகின்றன. இந்நிலையில், நேற்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில், 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெப்பு காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. ஏற்கனவே 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.