மலேசிய மாஜி பிரதமர் நஜிப்புக்கு சிறை தண்டனை பாதியாக குறைப்பு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை 12 ஆண்டில் இருந்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. நஜிப் ரசாக் பிரதமராக பதவியில் இருந்த 211 மற்றும் 2014க்கு உட்பட்ட காலத்தில்,அசு நிதி மோசடி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில், தன்னுடைய தண்டனையை குறைக்க கோரி தேசிய மன்னிப்பு வாரியத்திற்கு மனு அனுப்பினார். இதை விசாரித்த மன்னிப்பு வாரியம் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாதியாக குறைத்துள்ளது. அதே போல் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரூ. 364 கோடியில் இருந்து ரூ.132 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு