ஆம்ரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இ-ஸ்பிரின்டோ நிறுவனம், ஆம்ரி என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1,500 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ வேகத்தை 6 நொடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது.

முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கி.மீ தூரம் வரை செல்லலாம். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4 மணி நேரம் ஆகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிமோட் கட்டுப்பாட்டுடன் கூடிய லாக், மொபைல் சார்ஜிங் வசதி, வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறியும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்