ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பெயரில் சாலை; பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி..!!

சென்னை: ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலையை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரியில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் அவரது வீடு அமைந்திருக்கும் கச்சேரி சாலை, திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பெயர் மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து காரை வாய்க்கால் செல்லக்கூடிய கச்சேரி சாலை, திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி பெயர் பலகையை திறந்து வைத்தார். திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் வைத்ததற்கு நன்றி தெரிவித்த இளங்கோவன், திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவேன் என்றார்.

Related posts

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்

நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!

திறந்தநிலையிலான ‘ஊக்கை’ விழுங்கிய 3வயது குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை