செங்கல்சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் செங்கல் சூளைகளில் பணிபுரிய புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அனைத்து செங்கல் சூளைகளிலும் கணக்கெடுப்பு நடத்தி அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்து சீருடை, நோட்டுப் புத்தகம், விலையில்லா பொருட்கள் ஆகிய அனைத்தும் வழங்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மதிய உணவு வழங்கிட நேர்முக உதவியாளருக்கும், பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும், அனைத்து குழந்தையும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யவும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், செங்கல் உற்பத்தியாளர் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெரும்பாலான குழந்தைகள் ஒடிசா மாநிலத்தில் இருந்து வருவதால் ஒடியா மொழி புத்தகங்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்ந்த வட்டார வள மையங்களின் மூலம் வழங்கவும், குழந்தைகளின் தினசரி வருகைப் பதிவை உறுதி செய்யவும் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் 2023-24ம் கல்வி ஆண்டில் 2,848 குழந்தைகளை முறையான பள்ளிகளில் சேர்த்து 139 கல்வி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மையத்தில் சேரும் போது அவர்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ரவிசந்திரன் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை