இங்கிலாந்தில் உலக நாடுகள் பங்கேற்கும் யூரோ விஷன் பாடல் போட்டி: உக்ரைன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு

லண்டன்: உலக நாடுகள் பங்கேற்கும் புகழ் பெற்ற யூரோ விஷன் பாட்டு போட்டி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நீலபச்சை வண்ண கம்பள வரவேற்புடன் தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசை குழுவினரின் பிறப்பிடமான லிவர்பூல் நகரின் இசையால் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் யூரோ விஷன் 67-வது பாடல் போட்டி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு யூரோ விஷன் போட்டியின் வெற்றியாளரின் சொந்த நாடான உக்ரைனில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி போர் காரணமாக இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் உக்ரைன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக 3 போட்டிகள் நடைபெறுகின்றன. யூரோ விஷன் நிகழ்வின் சிறப்பு கம்பளமாக கருதப்படும் நீலபச்சை நிற கம்பளத்தில் போட்டியாளர்கள் நடந்து சென்றனர். இந்த போட்டியில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போட்டியிடுகின்றனர். வரும் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று நடைபெற உள்ள மீதமுள்ள 20 இடங்களுக்கான அரையிறுதி போட்டிகளில் 31 இசை குழுக்கள் போட்டியிடுகின்றனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!