பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்) முதலாமாண்டு சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடைபெறும். இன்ஜினியரிங் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வசதியில்லாதவர்கள் தங்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இணைய வசதியற்றவர்கள் வரைவோலை மூலமாக பதிவுக் கட்டணத்தை செலுத்தலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை தேர்வு செய்துவிட வேண்டும்.

அதே நேரம் விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் மட்டும் நேரடியாக நடைபெறும். இன்ஜினியரிங் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு 446 கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டன. இந்த ஆண்டும் அதே அளவிலான கல்லூரிகள் கலந்துகொள்ளும். கலந்தாய்வை பொறுத்தவரையில் 4 கட்டங்களாக நடைபெறும். இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்துவிட்டு பின்னர் வேறு படிப்பிற்கு மாணவர்கள் செல்லும்போது அந்த இடம் காலியாகி விடுகிறது. கடந்த ஆண்டு 7,545 இடங்களும் அதற்கு முன் ஆண்டில் 14,183 இடங்களும் காலியாக இருந்தன. இந்த ஆண்டு மேலும் குறைக்கும் அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆக.7ல் பொது கலந்தாய்வு
விண்ணப்ப பதிவு தொடக்கம் 5.5.2023
விண்ணப்ப பதிவு இறுதி நாள் 4.6.2023
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 9.6.2023
சான்றிதழ் சரிபார்க்கும் நாள் 12.6.2023-30.6.2023
தரவரிசை பட்டியல் வெளியீடு 12.7.2023

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 2.8.2023-5.8.2023
பொது கலந்தாய்வு 7.8.2023-24.9.2023
துணை கலந்தாய்வு 26.9.2023-29.9.2023
எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி கலந்தாய்வு 1.10.2023-3.10.2023
கலந்தாய்வு இறுதி நாள் 3.10.2023

Related posts

குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை

வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து அனுமதி பெற்றால்தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும்