அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வருக்கு அதிக செல்வாக்கு இருப்பதையே இது காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் 8 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்து வருவதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் தினமும் விசாரணை என்ற அடிப்படையில் சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related posts

ஒடிசா தேர்தலில் தோல்வி 24 ஆண்டு முதல்வர் பதவி நவீன் பட்நாயக் ராஜினாமா

முன்னாள் முதல்வரையே வீழ்த்தி சிறையில் இருந்தபடி வென்ற 2 எம்பிக்கள்: சட்டம் சொல்வது என்ன?

மக்களவை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள் பாஜவுக்கு 240, காங்கிரசுக்கு 99 இடங்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு