வேலைவாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கை அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். முதல்வர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். திமுக ஆட்சிக்கு வந்த3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்;தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.

Related posts

‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி கட்டவந்தபோது தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சேலத்தில் சினிமாபோல் பரபரப்பு சம்பவம்

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது