சின்னங்களை காக்க வேண்டியது கட்சி தலைவர்களின் கடமை: சொல்கிறார் ஜி.கே.வாசன்

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பகுதியில் பாஜ வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி்: பணம் இல்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது, அவரது நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதையும் குறிக்கிறது. சின்னம் ஒதுக்குவது என்பது ஒரு கட்சித்தலைவர், அவருடைய கட்சிக்கு செய்ய வேண்டிய கடமை.

ஒரு தலைவர் அந்த கட்சிக்கு அந்த பணியை சரிவர செய்யவில்லை என்றால், அந்த கடமையிலிருந்து அவர் தவறி இருக்கிறார் என்று அர்த்தம். சின்னம் ஒதுக்குவது என்பதற்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலே நாம் செயல்பட வேண்டும், அதை கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் இருக்கிறது. கட்சி தலைவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை என்றால், அதனை அவர்கள் புரிதலின் அடிப்படையில் சரியாக செய்யவில்லை என்பதுதான் அர்த்தம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கூட நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்புதான் சைக்கிள் சின்னம் கிடைத்தது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு