தூதரக தாக்குதல் எதிரொலி இந்தியா-இங்கி. வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்?

லண்டன்: லண்டனில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக இங்கிலாந்து உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதனிடையே, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசை இந்தியா வலியுறுத்தியது.

பிரிட்டிஷ் சீக்கியர்கள் அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுவெளியில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவும் இங்கிலாந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக இங்கிலாந்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள், வரும் 24ம் தேதி முதல் இது தொடர்பான பேச்சுவார்த்தை லண்டனில் தொடங்க இருப்பதாக தெரிவித்தனர்.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு