தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை இயல்பாக மேற்கொள்ள உதவும்: தேர்தல் ஆணையத்திற்கு விக்கிரமராஜா நன்றி

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வால் வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ள உதவியாக வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறினோம். மேலும் வாக்களிப்பு முடிந்தவுடன், இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடைபெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் பறக்கும் படைகள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதான வரவேற்று தமிழகம் என்றுமே அமைதிப் பூங்கா என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும், தேர்தல் பணியாளர்களுக்கம், தேர்தல் நேர்மையாக நடைபெற வாக்களித்த வாக்காளர்களுக்கும், பேரமைப்பின் பணிகளை தொய்வின்றி, நடத்திட தோளோடு தோள் கொடுக்கும் வணிகர்களுக்கும், உறவுகளுக்கும், நன்றியை காணிக்கையாக்கி, பேரமைப்பு வணிகப்பணியை தொடர்ந்திட அனைவரும் துணை நிற்க வேண்டும்.

Related posts

தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்

மீன் வளர்ப்பு

மகிழ்ச்சி தரும் மரவள்ளி சாகுபடி!