தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்: கோவையில் நேற்றிரவு திமுகவினரை தாக்கிய பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் நேற்றிரவு திமுகவினரை தாக்கிய பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேலாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனுமதித்த நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்தது குறித்து கேள்வி கேட்ட திமுகவினர் மீது பா.ஜ.க.வினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில் இரவு 10.40 மணி அளவில் பிரசாரம் செய்ததை எதிர்த்த திமுகவினர் மீது வாகனங்களில் வந்த பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகத் தெரிகிறது. இதனிடையே தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் குணசேகரன் என்பவர் சீலமேடு போலீசாரிடம் புகார் தந்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க.வினர் மாசாணி, ஆனந்தன், லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகியோர் மீது 3 பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடியது, அவதூறு பேசியது, அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு