தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதிரொலி; உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலகங்களுக்கு சீல்.! சுவர் விளம்பரங்கள் அழிப்பு

திருவொற்றியூர்: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள மண்டல குழு தலைவர் அலுவலகம், கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 5ம் தேதி முதல் மீண்டும் அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வரும். இதனிடையே காம்பவுண்ட் சுவர்கள் குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்களை மறைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளிட்ட நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள அரசு சாதனை விளம்பரங்களையும் காகிதம் மற்றும் வெள்ளை பேனர்களை வைத்து மறைக்கும் பணி நடைபெற்றது. சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை, சுண்ணாம்பு மற்றும் பெயிண்ட் அடித்து மறைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. நேற்றிரவு அதிகாரிகள் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகப்படும்படியான அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

Related posts

டெல்லியின் சிறிய கடையில் சென்னா மசாலா பூரி சாப்பிட்ட ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து

துடியலூர் அருகே டிராக்டரில் உணவு தேடிய ஒற்றை காட்டு யானை: சிசிடிவி காட்சி வைரல்