தேர்தலில் ராமர் கோயில் திறப்பு பிரதிபலிக்க வாய்ப்பில்லை; வெங்கையா நாயுடு

அவனியாபுரம்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஐதராபாத்தில் இருந்து நேற்று விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் திறப்பு 500 ஆண்டுகால போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ராமர் மதத்தலைவர் அல்ல. ராமர் இந்தியாவின் நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கான உருவகம். ராமர் கோயில் திறப்பின் மூலம் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என நான் நினைக்கவில்லை. தேர்தலுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிலர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் ராமர் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். அவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. இவ்வாறு கூறினார்.

Related posts

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்