வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வசிக்கும் வௌ்ளை மாளிகை மற்றும் மாளிகை அமைந்துள்ள பகுதிகளில் எப்போதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 15வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள வௌ்ளை மாளிகையின் நுழைவு வாயிலை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் வௌ்ளை மாளிகை பரபரப்பானது. பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் வௌ்ளை மாளிகைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தீவிரவாத தாக்குதலா அல்லது சாதாரண விபத்தா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்