60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்: பிரதமர் மோடி பேச்சு

திஸ்பூர்: 60ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது.

அந்த வகையில் அசாமின் நல்பாரியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; இன்று ராம நவமி வரலாற்று சிறப்பு மிக்க விழா. 500 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, ராமர் தனது பிரமாண்ட கோவிலில் அமர்ந்திருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ராமர் பிறந்தநாள் புனித நகரமான அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சூரிய திலகம் பூசிக் கொண்டாடப்படும். ஜூன் 4-ம் தேதி முடிவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இங்கு உங்கள் அனைவரின் அன்பும், உற்சாகமும், மகத்தான பிரசன்னமும் ஜூன் 4ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தருவோம், பாகுபாடின்றி வழங்குவோம். அசாமை வளர்ப்பதே எங்களின் முன்னுரிமை. எங்களது நலத்திட்டங்கள் அசாம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடக்கிறது, மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு மாநிலமே சாட்சி.

காங்கிரசால் பிரச்னைகளை மட்டுமே கொடுத்த வடகிழக்கு காங்கிரசால் தூண்டப்பட்ட பிரிவினைவாதத்திற்கான ஆதாரமாக பாஜக மாற்றியுள்ளது. 60ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன். எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பாஜக. 2014ல் நம்பிக்கையையும், 2019ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024ம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன்; இது மோடியின் கேரண்டி இவ்வாறு கூறினார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்