‘டோக்சுரி’ புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்.. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளி காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்!!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில் வட பகுதியை டோக்சுரி என பெயரிப்பட்டு இருக்கும் புயல் கடுமையாக தாக்கியதில் க்ளவேரியா, பகரா மற்றும் போன்டோக் மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மணிக்கு 175 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடும் புயல், சூறாவளி காற்றால் கடல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆங்காங்கே பல்வேறு தீவுகளில் சுமார் 4,000 பயணிகள் சொந்த இடங்களுக்கு போக முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். புயல் காரணமாக 4 பன்னாட்டு விமானங்கள் உட்பட மொத்தம் 50 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த புயலானது இன்னும் வலுவடைந்து தைவான், சீனா நாடுகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தைவான், சீனா ஆகிய 2 நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி