தூத்துக்குடியில் போட்டியிட அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா? அமைச்சர் சவால்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் ‘இந்தியா வெல்வது நிச்சயம்’ என்ற பொதுக்கூட்டம் புதியம்புத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த தொகுதிக்கு கனிமொழி எம்.பி. ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக தற்போது பெய்த மழை வெள்ள பாதிப்பின்போது சில பகுதிகளுக்கு நாங்கள் செல்வதற்கு அச்சப்பட்ட நேரத்தில் அவர் முன்னின்று சென்றபோது நாங்கள் பின்னால் பயணித்தோம்.

இந்த தொகுதியில் அண்ணாமலை எங்களது கனிமொழி எம்.பி.யை எதிர்த்து போட்டியிட தயாரா? தைாியம் இருக்கிறதா?. டெபாசிட் கிடைக்காது. அமலாக்கத்துறை, வருமான வாித்துறை என எந்த துறையை வைத்து மிரட்டினாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு அமர்ந்திருக்கின்ற எல்லோரும் களப்பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்

தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி மனு