கட்சிப் பணி, மக்கள் பணி என இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்: திமுக எம்.எல்.ஏ புகழேந்திக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை: நலம்பெற்று திரும்ப வருவார் என காத்திருந்த நிலையில் புகழேந்தி மறைவு ஆழ்ந்த துயரை அளிக்கிறது என்று திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் – விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

61 நாள் தடைகாலம் நிறைவு; நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2,415 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: மீனவர்கள் உற்சாகம்

கேரளாவில் இன்று காலை திடீர் நில அதிர்வு: அலறியடித்து மக்கள் ஓட்டம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு