நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது

*என்.ஆர்.இளங்கோ எம்பி பேச்சு

நெல்லை : திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது என்று திமுக சட்டத்துறை சார்பில் நெல்லையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுச்போட்டி தொடக்க விழாவில் மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி, பேசினார்.திமுக சட்டத்துறை சார்பில் நெல்லை மண்டல வழக்கறிஞர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் நெல்லை மாநகர வழக்கறிஞரணி சார்பில் 200 வக்கீல்கள் திமுகவில் இணையும் விழா பாளையில் நடந்தது. பேச்சு போட்டியை துவக்கி வைத்து மாநில சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., பேசியதாவது:

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சட்டத்துறை சார்பில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலைஞரின் பார்வையில் மாநில சுயாட்சி, சமூகநீதி, கல்வி உள்ளிட்ட 5 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சிலப்பதிகாரம், திருக்குறளை மறந்து தமிழர்களால் இருந்துவிட முடியாது. அதுபோல்தான் திமுக தலைவர் கருணாநிதியை மறந்தும், தமிழர்கள் இருந்துவிட முடியாது. தனது வாழ்நாள் முழுவதும், தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் அர்ப்பணித்தவர் கலைஞர். திராவிட சித்தாந்தம் அழிந்து போகாமல் இருப்பதை இந்த பேச்சு போட்டி நிருபித்து காட்டிவருகிறது.

செங்கல்பட்டு, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பேச்சு போட்டியில் அதிகமான சட்டக் கல்லூரி மாணவர்கள், இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்களின் பேச்சுக்களை கேட்கும் போது திராவிட சித்தாந்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. திமுகவினரையும், திமுகவையும் பாதுகாக்க வழக்கறிஞரணி எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!