மாவட்ட வளர்ச்சிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அரசாணை வெளியீடு

சென்னை: மாவட்ட வளர்ச்சிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடையவேண்டிய நலத்திட்ட பணிகளை கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் தமிழக அரசின் உதவிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நலத்திட்டப்பணிகளில் கவனம் செலுத்துவார்கள்.

அவ்வப்போது பொறுப்பு அமைச்சர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்பட்டுவந்த சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மெய்யனாதனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ரகுபதி நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மே-22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்