அங்கித் திவாரி மனு தள்ளுபடி


திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு டாக்டரிடம் ரூ40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவர், தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இதன்படி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற ேவலை நாட்களில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இதில் இருந்து தளர்வு கேட்டு அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடுவர் மோகனா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வு கொடுப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்