ஸ்ரீபெரும்புதூர் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில் சோழர்கால கலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணியின்போது, சோழர்கால கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த நத்தமேடு பகுதியில், கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது. சுமார் 3 மாதங்கள் வரை நடைபெற்ற இந்த அகழ்வாராய்ச்சியில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இடைக்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் ரோமாபுரியர்களின் மண்பாண்டங்கள், தங்கம், உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்க பூமிபூஜை கடந்த மாதம் நத்தமேடு பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கபட்டன. சுடுமண் பொம்மைகள், செம்பு வளையங்கள், விலை உயர்ந்த கல்மணிகள், சுடுமண் முத்திரை, செம்பாலான மூடியுடன் கூடிய கிண்ணம், கூம்பு வடிவ ஜாடி, செப்பு வளையங்கள் தங்க ஆபரணத்தின் சிறு தகடு, ஆணி வடிவிலான தண்டு பகுதி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை