திண்டிவனம் நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை சுடுகாட்டில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு-நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள ரோசணை சுடுகாட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் சாலை ஓரம் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி முழுவதும் சீர்கேடு ஏற்படுவதுடன், ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதேபோல் திண்டிவனம் மாரிசெட்டிகுளம் அருகே உள்ள ரோசணை சுடுகாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி, குப்பைக்கு தீ வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் நேற்று நகராட்சி வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ரோசணை சுடுகாட்டில் கொட்டும்போது, அங்கு வந்த பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றி, இடத்தை சுத்தம் செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு