திண்டிவனம் அருகே சாவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது

*12 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த தேவன் (31) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். இவரது சாவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு அழுததனர்.

அப்போது உடல் வைக்கப்பட்டு இருந்த பிரீசர் பாக்சில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அங்கு அழுது கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த எட்டியான் மகன் பகவான் (27) மற்றும் அய்யம்மாள் (55), அஞ்சலை (40), பத்மாவதி (45), கவுரி (60), சந்தியா (28), வெண்ணிலா (39), மஞ்சுளா (45) உள்ளிட்ட 12 பேர் மீது மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ரோசணை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்