தென்கிழக்கு வங்கக்கடல் உள்ள காற்றழுத்த தாழ்வு; அந்தமானில் நாளை புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்னிந்திய பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 11ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அத்துடன், 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் உயரும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், அதற்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாக உள்ளதால், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து