தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தொண்டாமுத்தூர்: கோவையை அடுத்த ஆலாந்துறை முண்டாந்துறை தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் பிரவீன் (17), பழனிச்சாமி மகன் கவீன் (16), வேலுச்சாமி மகன் தக்‌ஷன் (17). இவர்கள் 3 பேரும் தீத்திப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் தங்களது பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சஞ்சய் (21) என்பவருடன் ஒரே பைக்கில் ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்ற கவீன் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற பிரவீன், தக்‌ஷன் ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.

உயிருக்கு போராடியபடி அவர்கள் தத்தளிப்பதை கண்ட சஞ்சய் நண்பர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் தேடி 3 மாணவர்களையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்