தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.594 வழங்க வேண்டும்

*திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மனு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.594 வழங்க வேண்டும் என கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்க மாநில தலைவர் காளிராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவுப்படி தினக்கூலி ரூ.594 வழங்க வேண்டும் என அறிவித்திருந்தார். ஆனால் அதனை பேரூராட்சி செயல் அலுவலர்கள் முறையாக கடைப்பிடிக்காமல் தினக்கூலி ரூ.400 மட்டுமே வழங்கி வருகின்றனர். எனவே கலெக்டர் விசாரணை செய்து தினக்கூலி ரூ.594 மற்றும் நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்