கடலூரில் 1 கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை; பொதுமக்கள் வரவேற்பு..!!

கடலூர்: கர்நாடக மாநிலம் கோளாறில் இருந்து கொண்டுவரப்படும் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கடலூரில் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் தக்காளி விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது. தமிழ்நாட்டில் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தக்காளி வரத்து சீராக இல்லாததால் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதனிடையே கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் ஏற்கனவே கோளாறில் இருந்து கொண்டுவரப்பட்ட தக்காளி, குறைந்த விலைக்கு விற்கப்பட்ட போது வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் கோலார் தக்காளி வரத்து காரணமாக ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமானதால் டோக்கன் வழங்கி தக்காளி விற்பனை நடைபெற்றது. தன்னிடம் இருப்பு உள்ளவரை குறைவான விலைக்கு தக்காளியை வழங்க உள்ளதாக அந்த வியாபாரி தெரிவித்துள்ளார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்