சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து 3ம்நாளில் உயிர்தெழுந்தார் திருச்சி கிறிஸ்துவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு கோலாகலம்

திருச்சி:கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி திருநீற்றுப் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் புனித தவக்கால விரதம் மேற்கொண்டவர்கள் அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களில் நடந்த நற்கருணை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், பாலக்கரை எடத்தெரு உலக மீட்பர் பசிலிக்காவில் நேற்றுமுன்தினம் இரவு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பாதங்களை பசிலிக்கா அதிபர் ரெக்ஸ் மற்றும் பாதிரியார்கள் கண்ணீர்விட்டு முத்தமிட்டனர்.

பின்னர் சிலுவையை குழுமியிருந்த பக்தர்களிடம் கொண்டு சென்றனர். நள்ளிரவு மரித்த இயேசு கிறிஸ்துவின் உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு உடலை பசிலிக்காவை சுற்றி வந்து ஆலயத்தின் முன்பு வைத்து தூம்பா பவனி நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட 2ம் நாளான நேற்று புனித சனி துக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. பசிலிக்காவில் திருப்பலியோ வேறு எந்த சடங்கும் நடைபெறாது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடப்பட்டது. நள்ளிரவு12 மணிக்கு இயேசு கிறிஸ்துவை வரவேற்று உலக மீட்பர் பசிலிக்கா மற்றும் மேலப்புதூர், எடத்தெரு, எடமலைப்பட்டிப்புதூர், பொன்மலை, கே.கே.நகர், மாம்பழச்சாலை, காட்டூர், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, மண்ணச்சநல்லூர், நெம்பர் 1 டோல்கேட் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டு அன்பை பரிமாறி கொண்டனர்.

Related posts

அதிமுக, பாஜவை பின்னுக்கு தள்ளி 4 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி

அண்ணாமலை, எல்.முருகன், ஓபிஎஸ், டிடிவி, ராதிகா, தமிழிசை என தமிழ்நாட்டில் மண்ணை கவ்விய விஐபிக்கள்

இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்: இன்று டெல்லி செல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி