நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் முதல்வர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் பாராட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்று செய்தி வெளிவந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் எஸ்.ரகுபதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து அம்பேத்கர் படம் அகற்ற கூடாது என்று கடிதம் வழங்கினார். அம்பேத்கரின் படம் அகற்றப்படும் என்ற செய்தி கேள்விப்பட்டதும் மின்னல் வேகத்தில் அல்ல, ராக்கெட் வேகத்தில் செயலாற்றி சட்ட மாமேதைக்கு பெருமையும், புகழும் சேர்த்திருக்கிறார். இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது