பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளி திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி திறப்பு கோடை வெயிலால் பள்ளி திறப்பு தாமதமானதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் பற்றாக்குறை நிலை உள்ளது.

மாணவர்களுக்கு பாடச் சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை; 9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பங்கேற்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…