லாரிகளுக்கு இடையில் சிக்கி தம்பதி சாவு: 2 குழந்தைகள் உயிர் தப்பினர்

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்தவர் அழகரசன்(29), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளமதி (25). நேற்று காலை அழகரசன், மனைவி மற்றும் குழந்தைகள் கிஷோர்(5), கிருத்திக் (2) ஆகியோருடன், டூவீலரில் பண்ணவாடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றனர். ராமன் நகர் அருகே வந்த போது, முன்னால் சென்ற பால் லாரி திடீரென நின்றதால் அழகரசன் தனது டூவீலரை நிறுத்தினார். அப்போது, பின்னால் கர்நாடக மாநிலம் சிமோகாவில் இருந்து பெருந்துறைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி, அழகரசனின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது.

இதனால், டூவீலர் முன்னால் நின்ற பால் லாரியில் மோதியது. இரண்டு வாகனங்களின் நடுவே சிக்கிக் கொண்டதில், அழகரசன், இளமதி ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் சமயபுரம் முத்துராஜா தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன் என்பவரை, கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இரண்டு லாரிகளுக்கு இடையில் தம்பதி டூவிலருடன் சிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்