வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்: மிசோரம் என்ஜிஓக்கள் மீண்டும் வலியுறுத்தல்

அய்ஸ்வால்: ஐந்து மாநில தேர்தல்களில் மிசோரம், சட்டீஸ்கர், ம.பி.யில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இவற்றுக்கான தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ல் அறிவிக்கப்பட உள்ளது.
கிறித்துவ சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மிசோரமில் தேவாலயங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் வாக்கு எண்ணுவதற்கும், தேவாலயம் செல்வதற்கும் தொடர்பில்லை என்பதால் தேதியில் மாற்றமில்லை என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மிசோரமை சேர்ந்த என்ஜிஓ குழுவினர் இதேகோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். இதற்காக டெல்லி சென்றுள்ள அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Related posts

எதிர்காலத்தில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா? செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிலடி: காங்கிரஸ் பொதுக்குழுவில் பரபரப்பு

தமிழில் அறிவிப்பு உள்ளிட்ட வழக்குகள் மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிப்பு குழந்தைத் தொழிலாளர் இல்லாத எதிர்காலம் அதுவே தமிழ்நாட்டின் பொற்காலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை