கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 244 டன் ரேஷன் அரிசி, 1000 கிலோ பருப்பு பறிமுதல்: உணவு பாதுக்காப்பு துறை தகவல்

சென்னை: மே மாதம் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 244.7 டன் ரேசன் அரிசி, 1000 கிலோ பருப்பு, 450 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பத் துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.18,41,994 மதிப்புள்ள 2,447 குவிண்டால் ரேஷன் அரிசி, 269 காஸ் சிலிண்டர்கள், 180 கிலோ கோதுமை, 1100 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் 450 லிட்டர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 150 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 561 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980ன் கீழ் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Related posts

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி