காந்தி குறித்து சர்ச்சை ஆளுநரை கண்டித்து கிராம சபையில் தீர்மானம்

சோழவந்தான்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியடிகளின் போராட்டங்கள் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம்’ என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழும்பின. வலைத்தளங்களிலும் பலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தனர். இந்த சூழலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காந்தியடிகள் பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!