நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது

சென்னை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மகிளா காங்கிரஸ் தலைவி சுதா தலைமை வகித்தார். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பெண்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார். மாநில துணை தலைவி மலர்கொடி, சாந்தி ஜோசப், துகினா, மாவட்ட தலைவிகள் தனலட்சுமி சரவணன், சுகன்யா செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனில் பல்வேறு அணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், அசன் மவுலானா, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், சிவ ராஜசேகரன் மற்றும் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உள்பட பல்வேறு அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி