கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (48). ஆதரவற்ற கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஊரப்பாக்கம் மற்றும் காரணைப்புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தங்கி அவ்வப்போது பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை காரணைப்புதுச்சேரியில் பால்ராஜ் ரத்த வாந்தி எடுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். தகவல் அறிந்ததும் ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆதரவற்ற, கட்டிட தொழிலாளியான பால்ராஜியின் உடலை தனது சொந்த செலவில், காரணைப்புதுச்சேரி சுடுகாட்டில் நேற்று மாலை அடக்கம் செய்தார்.

Related posts

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்