ரூ.5 கோடியில் முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி கடந்த மார்ச் 27ம்தேதி தொடங்கியது. இந்த கப்பல் கட்டுமானப் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, படூர் புறவழிச்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலத்தையும் அவர் ஆய்வு செய்தார். அந்த இடத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா, நடைபாதை, விளையாட்டு மைதானம் அமைத்து முட்டுக்காடு படகுத்துறையுடன் இணைக்க வாய்ப்புள்ளதா எனவும் அதிகாரிகளுடன் விவாதித்தார். பிறகு, இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பின்னர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், முட்டுக்காடு படகு குழாம் உதவி மேலாளர் பாஸ்கரன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்