கேரள அரசைக் கண்டித்து திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் காங்கிரஸ் முற்றுகை போராட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இடது முன்னணி அரசு 2வது ஆண்டு விழாவை இன்று கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் அரசைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி கட்சி தொடர்ச்சியாக 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 2021ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது. இன்று மாலை 2வது ஆண்டு விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரள அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாஜகவும் கேரள அரசைக் கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளது. திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தில் ‘ராப்பகல்’ போராட்டத்தை இக்கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

Related posts

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழப்பு

பாஜக பெரும்பான்மை பெறுவதை I.N.D.I.A. கூட்டணியால் தடுக்க முடியும் : கார்கே நம்பிக்கை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை