மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூரில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு நடைபெறும் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டும் இருக்கும் பாஜ அரசை கண்டித்து, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வழக்கறிஞர் சம்பத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர், வழக்கறிஞர் பிரிவு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் இமாலயா அருண் பிரசாத், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், நகர தலைவர் ஜமாலுதீன், வட்டார தலைவர்கள் மூர்த்தி, பெரியசாமி, மதன், மோகன், குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும், பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், சிவன், வழக்கறிஞர் சாமுவேல், செயலாளர் கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர்: இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநில பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும், கலவரத்தில் மாண்டு மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியும், அம்மாநிலத்தில் மற்றும் மத்தியில் ஆளும் பாஜ அரசை கண்டித்தும், பதவி விலகக் கோரியும் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர், நகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் மோகன்தாஸ், அஸ்வின்குமார், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அமுதன், வடிவேலு, சரஸ்வதி, ரகுராமன், ராமன், பழனி, முகுந்தன், சதீஷ், சத்யா, மோகன்ராஜ், கோடீஸ்வரன், செல்வகுமார், பார்த்தசாரதி, ரவி, உதயசங்கர், சபீர், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி