நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் காங். வெற்றி பெற இலக்கு: அமைச்சர்களுக்கு கர்நாடகா முதல்வர் உத்தரவு

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமைக்கு பரிசு வழங்க வேண்டும் என கர்நாடக அமைச்சர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதாவது: கன்னட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத பெரும்பான்மையையும், பெரிய பொறுப்பையும் வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் சார்பான நிர்வாகத்தை வழங்குவது நமது பொறுப்பு. புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் மக்களின் பிரச்னைகளை கேட்க வேண்டும், . கன்னட மக்கள் விதான சவுதாவுக்கு வந்து குறைகளை தெரிவிக்கும் அளவில் அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பரிசாக குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த இலக்கை மனதில் வைத்து அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் சுறுசுறுப்புடன் அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அனைத்து அமைச்சர்களுக்கும் காங்கிரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related posts

உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது

மே-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்