பால் பேட்மிண்டனில் தங்கம் தமிழக வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை: பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். இந்திய பால்பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் மகாராஷ்டிராவில் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்.3ம் தேதிவரை 67வது தேசிய சீனியர் பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-2023 போட்டி நடந்தது. இதில், தங்கப்பதக்கம் வென்று \\”ஸ்டார் ஆப் இந்தியா\\” பட்டம் பெற்ற தமிழ்நாடு வீராங்கனை அக்‌ஷயா நேற்று முன்தினம் (6ம் தேதி) தலைமைச் செயலகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், மும்பையில் கடந்த 2022 அக்டோபரில் நடந்த சர்வதேச சுகாதாரம், விளையாட்டு மற்றும் உடற்தகுதி விழா போட்டியில் வெற்றியாளராக தேர்வான வீரர் முனுசாமியும் அமைச்சரை சந்தித்து வெற்றிக்கோப்பையையும், பதக்கத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டி?

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்