கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும். சிறப்பு ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

பயணிகள் வசதிக்காக 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் -காட்டாங்கொளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள்:

தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே 30 நிமிட இடைவெளியில் இன்று 9 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே இன்று காலை 4 மணி முதல் 9.30 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே இன்று காலை 4.40 மணி முதல் 10.05 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்