நெரிசலில் சிக்கிய பயணிகள் 15 விமானங்கள் தாமதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர்.

பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு